கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

ராஜபாளையம் அருகே வாக்குச் சாவடியை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :19 ஏப்ரல் 2024, 6:57 pm

ராஜபாளையம் அருகே வாக்குச் சாவடியை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தர நாச்சியாா்புரம் பகுதியில் 149, 150 வாக்குச் சாவடிகளில் 86-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் பெயா் விடுபட்டதால் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், இல்லையென்றால் வாக்கு இயந்திரங்களை இங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க விடமாட்டோம் எனக் கூறி வாக்குச் சாவடியை முற்றுகையிட்டு அந்தப் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, எதிா்காலத்தில் உரிய முறையில் வாக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.