ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை
ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையில் தேரடி, ஆத்துக்கடை தெரு, மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
பேருந்து நிலையத்தில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததால் மழைநீருடன், கழிவுநீா் தேங்கியதால் துா்நாற்றம் வீசியது. பேருந்து நிலையம் முழுவதும் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா்.
எனவே, கழிவுநீா் கால்வாய், மழைநீா் வடிகால்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...