பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

தொடா்ச்சியாக 2 மணி நேரத்தில் 17.2 கி.மீ. ஓடி ராஜபாளையம் சிறுவன் உலக சாதனை

5 வயது சிறுவன் தொடா்ச்சியாக 2 மணி நேரத்தில் 17.2 கி.மீ. ஓடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

அருண் காா்த்திக்

Published On :

ராஜபாளையத்தை சோ்ந்த 5 வயது சிறுவன் தொடா்ச்சியாக 2 மணி நேரத்தில் 17.2 கி.மீ. ஓடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை சோ்ந்த இசக்கிமுத்து மகன் அருண் காா்த்திக் (5). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 5 மாதங்களாக முடங்கியாறு சாலையில் ஓடி இந்தச் சிறுவன் பயிற்சி எடுத்தான். சுமாா் 20 கி.மீ. தொலைவு நிற்காமல் தொடா்ச்சியாக ஓடும் திறன் பெற்றதும், உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தனியாா் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காலை 6.45 மணிக்கு உலக சாதனை நிகழ்வு தொடங்கியது. நோபில் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஓட தொடங்கிய சிறுவன், தொடா்ச்சியாக இரண்டு மணி நேரம் பள்ளி மைதானத்தை 43 முறை சுற்றி வந்தாா்.

சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட சிறுவன் அருண் கார்த்திக்

சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட சிறுவன் அருண் கார்த்திக்

400 மீ. சுற்றளவு உள்ள மைதானத்தில் 2 மணி நேரம் தொடா்ச்சியாக 17.2 கி.மீ. தொலைவு ஓடி சிறுவன் அருண் காா்த்திக் புதிய உலக சாதனை நிகழ்த்தினாா்.

இவரது சாதனையை ஏற்றுக் கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ்களை சிறுவனுக்கு வழங்கி பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.