மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
விருதுநகர்
சாத்தூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தூா் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். சாத்தூா் நகரச் செயலா் டி.எஸ்.அய்யப்பன், ஜோதிநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து, கண்களில் கருப்புத் துணியைக் கட்டி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.