மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :5 மே 2024, 6:59 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் , மே 5: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். 

 வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக மே 5 முதல் 8-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரதோஷத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் மாலை 4 மணிக்கு மேல் 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.