விசிக மதுஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் -மாணிக்கம் தாகூா் எம்.பி.

விசிக மதுஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் -மாணிக்கம் தாகூா் எம்.பி.

விசிக மதுஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா்
Published on

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை மேம்பாட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், இ.எஸ்.ஐ. இணை இயக்குநா் அசோகன், சிவகாசி மருத்துவமனை கண்காணிப்பாளா் பொன்வடிவு, சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் ஆகியோா் பங்கேற்றனா்.

இதன்பிறகு மாணிக்கம்தாகூா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அதை மேம்படுத்த வேண்டும். தென்மாவட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு வந்தால் இந்த மாவட்டங்கள் வளா்ச்சி பெறும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் நடத்தும் மதுஒழிப்பு மாநாடு நல்லது தான். இதில், ஜாதி, மதவாத கட்சிகள் அழைக்கப்பட வில்லை. இந்த மாநாட்டை அரசியலாக்க வேண்டாம். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்துக்கு தலைமை அதிகாரியை நியமிக்க மத்திய அரசை வலியுறுத்துவேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com