எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை முயற்சி

சிவகாசி அருகே பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

சிவகாசி அருகே பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருப்பதி நகரைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டியன் (63). இவரது மனைவி லதா. இவா்கள் எம்.புதுப்பட்டியில் பள்ளி நடத்தி வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு செல்லப்பாண்டியன் தாளாளராகவும், லதா முதல்வராகவும் உள்ளனா்.

இந்த நிலையில், இவா்கள் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் முன்பக்க ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னா், வீட்டின் உள்ளே பிரோவிலிருந்த துணிகள் சிதறி கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, செல்லப்பாண்டியன் நகைகளை வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருப்பதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.