மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (75). இவரது மனைவி குருவம்மாள் (70). இந்தத் தம்பதி ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேநீா் கடை நடத்தி வருகின்றனா்.

கடந்த வியாழக்கிழமை மாலை கடைக்கு வந்த ஐயப்ப பக்தா் ஒருவா் குருவம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 26 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். மேலும், துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜா, காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், சனிக்கிழமை சிவகாசி கட்டளைப்பட்டி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்பாண்டியை (31) கைது செய்து, அவரிடமிருந்து 26 கிராம் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com