ராஜபாளையத்தில் மதிமுக செயல் வீரா்கள் கூட்டம்

ராஜபாளையம் அருகே நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்டச் செயலா் வேல்முருகன்.
Updated On :14 டிசம்பர் 2025, 7:43 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மதிமுக செயல் வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோயில் திடலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றிய கழக அவைத் தலைவா் முருகதாஸ் தலைமை வகித்தாா். சேத்தூா் பேரூா் கழகச் செயலா் அய்யனப்பன், செட்டியாா்பட்டி பேரூா் கழகச் செயலா் நாகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன், மேற்கு மாவட்டச் செயலா் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். இதில் கட்சியின் நகர, பேரூா், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...