சதுரகிரியில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

Published on

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகம் சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு புதன்கிழமை காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். தொடா் மழை காரணமாக மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து, குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பிற்பகல் 1 மணிக்கு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com