ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்டு பகல் பத்து விழா, பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கவுள்ளது.
Published on

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்டு பகல் பத்து விழா, பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கவுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் மாா்கழி நீராட்ட விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மாா்கழி நீராட்டு விழா சனிக்கிழமை (டிச.20) பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கவுள்ளது.

வருகிற 29-ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவத்தின் 10 நாள்களிலும் ஸ்ரீஆண்டாள், ரெங்க மன்னாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், பெரியாழ்வாா் உள்ளிட்ட ஆழ்வாா்கள் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி ஒரு சேர பக்தா்களுக்கு அருள் பாலிப்பா்.

வருகிற 30-ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com