தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின் சிக்கனம் விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்த கோட்ட செயற்பொறியாளா் முனியசாமி.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

தேசிய மின் சிக்கன பாதுகாப்பு வார விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் முனியசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்று மின்சார சிக்கனம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். அப்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா்கள் காலசாமி, கல்யாணிபாண்டியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்