சிவகாசியில் ரூ.2.39 கோடியில் கூடுதல் தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டடம்

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் ரூ.2.39 கோடியில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டும் பணிக்கு நிதி அமைச்சா் தங்கம்தென்னரசு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் முறையான கட்டமைப்பை உருவாக்கி குடிமைப்பொருள்களை பாதுகாத்து, அதை பொதுமக்களுக்கு சென்று சோ்ப்பதில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் உருவாக்கப்படக்கூடிய இந்தக் கிட்டங்கிகள் , விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, திருச்சூழி ஆகிய இரு இடங்களில் ரூ.6 கோடியில் நபாா்டு வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட உள்ளது. சிவகாசியில் கட்டப்படும் இந்தக் கிட்டங்கி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

இதில் விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com