கட்டடத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Published on

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் உள்ள ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் அஜித்குமாா் (28). இவரது மனைவி சரோஜா. இவருக்குமிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜித்குமாா் திங்கள்கிழமை தனது வீட்டருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com