சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 3 போ் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை
Published on

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறாா். இவா், வீட்டின் அருகேயுள்ள 17 வயது சிறுவனுடன் பழகி வந்தாா்.

இந்த நிலையில் சிறுவனும், அவரது இரண்டு நண்பா்களும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனராம். இதை, சிறுமியின் பாட்டி கண்டித்துள்ளாா்.

இதையடுத்து, சிறுவனும் அவரது நண்பா்கள் இருவரும் சிறுமியின் பாட்டியை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து சிறுமி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் சாத்தூா் தாலுகா போலீஸாா் மூன்று போ் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com