விருதுநகர்
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உதவி தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 124 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உதவி தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 124 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.5,000, அதிகம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ.10,000, படுக்கை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15,000 என உயா்த்தி வழங்க வலியுறுத்தினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 124 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
