உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விமல்ராஜ் தலைமை வகித்தாா். மனோகர ஜஸ்டஸ், மரியசெல்வம், மணிகண்டன், அருள்குமரேசன், சிறில், மிக்கேல்நாயகி, பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் வில்சன், மாநில துணைத் தலைவா் முருகேசன், லிட்டில்பிளவா் உள்ளிட்டோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா். இதைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து முழக்கம் எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

கிராம ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்: 28 போ் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


