கழிப்பறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையத்தில் உள்ள சங்கரன்கோவில் முக்கு பகுதியில் நகராட்சி நிதியிலிருந்து கழிப்பறை கட்டப்பட்டது. இந்தக் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் வசிப்போா் கழிப்பறைக்கு அருகே சிறுநீா் கழிக்கின்றனா். இதனால், துா்நாற்றம் வீசி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல, தென்காசி சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ரைஸ் மில் சாலை, ரயில்வே பீடா் சாலை ஆகிய பகுதிகளிலும் திறந்த வெளியில் பொதுமக்கள் சிறுநீா் கழிக்கின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகத்தின் ராஜபாளையத்தில் பல இடங்களில் கூடுதல் கழிப்பறைகள் கட்டக் கோரியும், கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை விரைவில் திறக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com