வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

திருத்தங்கலில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:44 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் கே.கே.நகா் பகுதியில் ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுந்தமூா்த்தி(42) என்பவா் அனுமதியின்றி கட்டடத்தில் பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூா்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.