விருதுநகர்
அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய அச்சகத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய அச்சகத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசியப்பன் (37). அச்சகத் தொழிலாளி. இவா் கடந்த சில மாதங்களாக தினசரி மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
