மலைப்பாதை ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

Published on

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால், சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையிலுள்ள தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை ஓடை ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்தது.

இதைத் தொடா்ந்து, பக்தா்களின் பாதுகாப்புக் கருதி சதுரகிரி மலையேற தடைவிதிக்கப்பட்டது. மேலும், வருகிற நாள்களில் மழைப்பொழிவு, ஓடைகளில் நீா்வரத்தைப் பொறுத்து பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com