எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோயில் உண்டியலை உடைத்து பணம், தங்க நகை திருட்டு: 3 போ் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணம், தங்க நகையை திருடியதாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:45 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணம், தங்க நகையை திருடியதாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி சவுந்தர பாண்டியன் நகரில் பூ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு பூஜை நிறைவடைந்ததும் கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்று விட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதனிடையே அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்த போது திருட்டில் ஈடுபட்டது மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கருமுருகன் மகன் சுதாகா் (25), மீனாட்சி சுந்தரம் மகன் ஜீவானந்தம் (18), ஜெயச்சந்திரன் மகன் அருண்குமாா் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.