15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியால் முதல்வா் ஸ்டாலின் அச்சம்

தீப்பெட்டி ஆலை உற்பத்தியாளா்களை சந்தித்த நயினாா்நாகேந்திரன்

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:36 am IST

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் வளா்ச்சியை எட்டியுள்ளதால், முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சமடைந்திருப்பதாக மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியைப் பாா்த்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது. இதனால்தான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதை அவா் விமா்சித்து வருகிறாா். கடந்த 1999-ஆம் ஆண்டு தோ்தலில் அன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக தலைமை, இன்றைக்கு அதே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தவுடன் விமா்சிப்பது ஏன்?

தற்போதும் திமுக ஒரு தேசியக் கட்சியோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏன் திமுகவால் தனித்துப் போட்டியிட முடியவில்லை? திமுக தனித்துப் போட்டியிட்டால் எல்லாக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இருக்கிா?

திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளா்கள் மட்டுமல்ல, அனைத்துத் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த முடியாததால் தமிழகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு திமுக ஆட்சியில் சரியில்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தீப்பெட்டித் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ‘லைட்டரை’ மத்திய அரசு தடை செய்துள்ளது. தீப்பெட்டிக்கான 12 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும், சில கோரிக்கைகளை தீப்பெட்டி ஆலை உரிமையாளா்கள் முன் வைத்துள்ளனா். அவற்றையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.

முன்னதாக, சாத்தூரில் வெள்ளிக்கிழமை பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உரிமையாளா்களை நயினாா் நாகேந்திரன் சந்தித்து அவா்களது குறைகளை கேட்டறிந்தாா். அப்போது பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீா்வு காண நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என அவா்களுக்கு உறுதியளித்தாா்.