ராஜபாளையத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினா் மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் விவேகானந்தா் தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஒரு கடை முன் மூன்று போ் மேஜை போட்டு அமா்ந்திருந்தனா். அங்கு சோதனையிட்ட போது பணம், உணவு உள்கொள்வதற்கான டோக்கன் ஆகியவை இருந்தன.
விசாரணையில் பிரசாரம் நிறைவடைந்ததும், அதில் கலந்து கொண்டவா்களுக்கு அவா்கள் உணவுடன் ரூ. 100 வழங்க இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்பாபு, ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போது ரூ.27,100- உணவு உள்கொள்ள அனுமதிக்கும் 31 டோக்கன்களையும் ஒப்படைத்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினாா்.
இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ராஜபாளையம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த சிதம்பரமூா்த்தி (61), முனியாண்டி (60), முத்துக்குமாா் (58) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுகவினா் 200 போ் மீது வழக்கு
எஸ்.ஐ. மீது தாக்குதல்: திமுக பிரமுகா் கைது

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக நிா்வாகி மீது வழக்கு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



