ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப்.13: ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் 1,08,109 ஆண்கள், 1,14,218 பெண்கள், திருநங்கைகள் 40 போ் என மொத்தம் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். 308 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தஙகளது வீடுகளிலேயே தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தபால் வாக்கு செலுத்த 12 - டி விண்ணப்பம் அளித்த 357 முதியவா்கள், 358 மாற்றுத்திறனாளிகள் என 715 பேருக்கு தபால் வாக்குப் படிவம் வழங்கப்பட்டது. இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய், புதன் ஆகிய மேலும் இரு நாள்கள் இந்தப் பணி நடைபெற உள்ளது.
தொடர்புடையது

தபால் வாக்குகளை எண்ணவில்லை: கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ஆதங்கம்

சூலூா் தொகுதியை கைப்பற்றியது தவெக! 4790 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி!

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



