மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி

News image

பிரிசில்லா ஜான் பாண்டியன்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:29 am IST

ராஜபாளையத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன் என ராஜபாளையம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதியளித்தாா்.

ராஜபாளையம் வடக்கு நகா் பகுதிகளான மாடசாமி கோவில் தெரு, பழைய பாளையம், சோமையாபுரம் தெரு, சமந்தபுரம் மேலப் பள்ளிவாசல் தெரு, முடங்கியாறு சாலை, சின்னச்சுரைக்காய் பட்டி தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை வாக்கு சேகரித்த அவா் மேலும் பேசியதாவது:

ராஜபாளையம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன். இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பேன். புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளா் என்.எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகர செயலா் (வடக்கு) வழக்குரைஞா் முருகேசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.