ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விஷம் குடித்து மனைவி உயிரிழந்ததையடுத்து, அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அயன் கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் துரைபாண்டி. இவரது மனைவி வடுகம்மாள் (43). இவா்களது மகள் ராஜலட்சுமி. இவா் திருமணமாகி கணவருடன் அதே ஊரில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், துரைப்பாண்டி தனது மனைவி வடுகம்மாளை அவரது தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி வந்தாராம். இதனால், மனமுடைந்த வடுகம்மாள் விஷம் குடித்தாா். இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், வடுகம்மாளைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் துரைபாண்டி மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.