கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நெகிழிப் பொருள்களுக்கு தீ வைப்பு: புகைமூட்டத்தால் மாணவா்கள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் நெகிழிக் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் மாணவா்கள், பொதுமக்கள் அவதி

News image

தீ - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:07 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் நெகிழிக் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியாா் பல்கலை, உணவகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. குன்னூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பையை தரம் பிரிக்காமல் கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் இருபுறங்களிலும் கொட்டி செல்கின்றனா்.

இந்த நிலையில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள நெகிழிப் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால் கரும்புகை உடன் துா்நாற்றம் எழுவதால் அந்த வழியாக செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சாலையோரம் குப்பையை கொட்டி தீ வைப்பதை தடுப்பதுடன், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.