காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூர திருவிழா: 16 வண்டி சப்பரத்தில் வலம் வந்த ஆண்டாள், ரெங்கமன்னாா்

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தோ் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 16 வண்டி சப்பர ஊா்வலம்.

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தோ் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 16 வண்டி சப்பர ஊா்வலம்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் 16 வண்டி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதார உத்ஸவமான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான வியாழக்கிழமை இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் 16 வண்டி சப்பரத்தில் எழுந்தருளினா். இரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதன்பிறகு திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக சப்பரத்தை இழுத்தனா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை ஆண்டாள் தங்க பல்லக்கிலும், ரெங்கமன்னாா் தந்த பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.