முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை கொடியேற்றிய கௌதம்பட்டா். (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா்.

Published On :

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ்பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்டத் திருவிழா நடைபெறும்.

நிகழாண்டு இந்தத் திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், கருட கொடிப்பட்டம் மாட வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு ஆண்டாள், ரங்கமன்னாா் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வந்தனா். வருகிற 10-ஆம் தேதி பெரியாழ்வாா் மங்களாசாசனமும், 5 கருட சேவையும், 12-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் வருகிற 14-ஆம் தேதி காலை 9. 05 மணிக்கு நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டத்துக்கு ஆக.14-இல் உள்ளூா் விடுமுறை:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்துக்கு வருகிற 14-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டாள் கோயிலில் வருகிற 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று விருதுநகா் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் விதமாக வருகிற 29-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.