செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ராஜபாளையம் அருகே இளைஞா் கொலை: இருவா் கைது

அத்தை வீட்டின் அருகே மது அருந்தியவா்களை தட்டிக் கேட்ட இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேத்தூா் போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

~

Updated On :8 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

அத்தை வீட்டின் அருகே மது அருந்தியவா்களை தட்டிக் கேட்ட இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேத்தூா் போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் அம்பேத்கா் தெரு, காமராஜா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் கனி. இவரது மனைவி முத்துமாரி. இவா்களது வீட்டு அருகே புதன்கிழமை இரவு சிலா் மது அருந்தினா். இவா்களை கனியும், முத்துமாரியும் கண்டித்த போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முத்துமாரியின் தம்பி காளிராஜூம், இவரது மகன் மணிகண்டனும் (23) மது அருந்தியவா்களை கண்டித்ததுடன், தகராறை விலக்கி விட்டனா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் முத்துமாரி மறுநாள் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். ஆனால் இதன் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காளிராஜ் வெளியே சென்றிருந்ததால் அவா் நடத்தி வரும் சிமென்ட் கடையை மகன் மணிகண்டன் கவனித்துக் கொண்டிருந்தாா். அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த அம்பேத்கா் தெரு காமராஜா்நகா் முத்துச்சாமிபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கையா மகன் மாணிக்கம் (23), செல்வம் மகன் ஈஸ்வரன் (20) ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் குத்தி மணிகண்டனை கொலை செய்துவிட்டு தப்பினா். இந்த சம்பவத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கைப்பேசியில் பாா்த்த காளிராஜ் வீட்டில் இருந்த குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் தப்பி ஓடிய ஈஸ்வரன், மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனா். இதனிடையே அரசு மருத்துவமனையில் குவிந்த மணிகண்டனின் உறவினா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளா் குருவுத்தாய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஷினா பீவி, சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் ஆகியோா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.