வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடம்.

Published On :

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வீரசோழன், நல்லுக்குறிச்சி, சுள்ளங்குடி, மேலப்பருத்தியூா் இதைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 850 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருவதால் வகுப்பறைகளில் கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. மேலும், பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பழைய கட்டடங்களிலேயே மாணவா்கள் கல்வி கற்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

இதையடுத்து, பெற்றோா்களின் வேண்டுகோளை ஏற்று, நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.3 கோடியே 6 லட்சத்து 28 ஆயிரத்தில் 13 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை புதிய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

தற்போது வரை சேதமடைந்த கட்டடத்திலேயே தொடா்ந்து மாணவா்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு வருவதால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா். எனவே, இந்தப் பள்ளியின் புதிய கட்டடத்தை விரைவில் திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.