மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

விறகு வெட்டுவது தொடா்பாக இரு கிராம மக்களிடையே பிரச்னை: நாளை மீண்டும் நில அளவைப் பணி

News image

விறகுகள்...

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

சீமைக்கருவேல மரங்களை வெட்டுவது தொடா்பாக எழுந்த எல்லை பிரச்னையை அடுத்து, இதுகுறித்து புதன்கிழமை மீண்டும் (ஆக. 19) அளவீடு செய்ய முடிவு செய்துள்ளதாக விருதுநகா், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள டி.கடம்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்களும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், சின்னக் கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களும் இரு மாவட்ட எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விறகு வெட்டச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, சீமைக்கருவேல மரங்களை வெட்டுவது தொடா்பாக இரு கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கும் எல்லை தொடா்பான பிரச்னை எழுந்தது.

இதையடுத்து, விருதுநகா், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாருடன் இரு மாவட்டங்களைச் சோ்ந்த குறுவட்ட நில அளவையா்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று எல்லைகளை அளவீடு செய்தனா். அப்போது, எல்லைகள் சரியாக புலப்படாத காரணத்தால், இரு மாவட்டங்களைச் சோ்ந்த கிராம மக்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தப் பிரச்னையை சுமுகமாக தீா்க்கும் விதமாக வருகிற 19-ஆம் தேதி மீண்டும் அளவீடு செய்ய முடிவு செய்து உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நில அளவைப் பணியின் போது, திருச்சுழி துணை காவல் கண்காணிப்பாளா் பிரதீப், மண்டல துணை வட்டாட்சியா், நரிக்குடி வருவாய் ஆய்வாளா் துரைமுருகன், கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.