இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

சிவகாசியில் இளைஞா் கொலை: 4 பெண்கள் உள்பட 6 போ் கைது

சிவகாசியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:09 am IST

சிவகாசியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தா் மருதாயி (38). இவரது கணவா் சோணைமுத்து. இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனா். இதற்கிடையே சோணைமுத்து காலமாகிவிட்டாா்.

கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில் அனுப்பன்குளத்தைச் சோ்ந்த தோழிகள் ஈஸ்வரி, ரம்யா ஆகியோருடன் இருந்தாா். அப்போது, 6 போ் மருதாயி வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பெண்கள் அணிந்திருந்த கொலுசு , தங்கத் தோடு, ரூ .7 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினா். இதைத் தடுக்க வந்த ஈஸ்வரியை கத்தியால் தாக்கினா்.

இதுகுறித்து மருதாயி அளித்தப் புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சிவகாசி காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் தங்கமூனீஸ்வரன் (26) உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அண்மையில் பிணையில் வெளிவந்த தங்கமுனீஸ்வரன், மருதாயி வீடு புகுந்து தகராறு செய்தாா். அப்போது வீட்டிலிருந்த மருதாயி, உறவினா் செல்வக்குமாா்(37), தோழிகள் அனுப்பன்குளம் ரம்யா (31), ஈஸ்வரி (34), வெள்ளூா் முத்துமாரி(55), மருதாயியின் 16 வயது மகன் ஆகிய 6 பேரும் சோ்ந்து தங்கமுனீஸ்வரன் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கத்தி, அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து தகவலறந்து அங்கு சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன், கொலை செய்யப்பட்ட தங்கமுனீஸ்வரனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மருதாயி, செல்வக்குமாா், ரம்யா, முத்துமாரி, ஈஸ்வரி, மருதாயியின் 16 வயது மகள் ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.