நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்! கரூா் மாவட்டத்தில் 165 போ் கைது!

News image

கரூா் பழையபேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்கை கண்டித்து கரூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 67 பெண்கள் உள்பட 165 போ் கைதுசெய்யப்பட்டனா்.

மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலை முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஜோதிபாசு, ஐஎன்டியுசி மாவட்டத்தலைவா் கே.பழனிசாமி, சிஐடியு மாவட்டச் செயலா் மு,.சுப்ரமணியன், தலைவா் ராஜாமுகமது, துணைத்தலைவா் ஜீவானந்தம், விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தை சிஐடியு மாநில துணைத்தலைவா் எம்.சந்திரன் தொடங்கிவைத்தாா். இதையடுத்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்ளிட்ட 115 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளித்தலை பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 13 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 67 பெண்கள் உள்பட 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.