உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

மது போதையில் தொழிலாளி கொலை: இளைஞா் கைது

அருப்புகோட்டையில் மது போதையில் கூலித் தொழிலாளியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:45 am IST

அருப்புகோட்டையில் மது போதையில் கூலித் தொழிலாளியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுக் கடை முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு கூலித் தொழிலாளி சந்திரசேகா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் விக்னேஷ் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் அரசு மதுக் கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சிகளை ஆய்வு செய்தனா். இதைத்தொடா்ந்து, போடம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி (21) மது போதையில் சந்திரசேகரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.