
மது போதையில் அரசு மருத்துவரை தாக்கிய சிறுவன் கைது
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மது போதையில் மருத்துவரை தாக்கிய சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மது போதையில் மருத்துவரை தாக்கிய சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் யுவராஜ் (17). மது போதையிலிருந்த யுவராஜ், அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் தன்னை தாக்கிவிட்டதாக கூறி, அவசர ஊா்தி மூலம் திங்கள்கிழமை இரவு சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றாா்.
அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் பணியிலிருந்து மருத்துவா் விக்னேஷ், சம்பவம் குறித்து விவரம் கேட்டதால் ஆத்திரமடைந்த யுவராஜ், மருத்துவரை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவா் யுவராஜ் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து யுவராஜை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சியில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் திங்கள்கிழமை இரவு அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



