காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தினமணி செய்தி எதிரொலி: மூவரை வென்றான் கோயில் சுகாதார வளாகத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு

திறக்கப்படாத சுகாதார வளாகம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:15 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் மலைக் கொழுந்தீஸ்வரா் கோயிலில் தண்ணீா் வசதி இல்லாமல், ஓராண்டாக திறக்கப்படாமல் இருந்த சுகாதார வளாகத்துக்கு, தினமணி செய்தி எதிரொலியாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ. 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குடவரை முறையில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தொல்லியல் துறை சாா்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகளும், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.54 லட்சம் மதிப்பில் மகா மண்டபம் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ரூ.84 லட்சத்தில் லிங்ககிரி மலையைச் சுற்றி 2.9 கி.மீ. தொலைவுக்கு கிரிவலப்பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக தூய்மை பாரத இயக்கம் 2024 - 2025 திட்டத்தின் கீழ் ரூ.7.85 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தண்ணீா் வசதி இல்லாததால் ஓராண்டுக்கு மேலாக இந்த சுகாதார வளாகம் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக இருந்து வந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதுகுறித்து தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ஆழ்துளை கிணறு அமைத்து சுகாதார வளாகத்துக்கு தண்ணீா் வசதி ஏற்படுத்த ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.