
மாமனாரின் விரலை கடித்து துண்டாக்கிய மருமகன்! போலீஸாா் விசாரணை!

போலீஸ் - கோப்புப்படம்.
ராஜபாளையம் அருகே மாமனாரின் விரலைக் கடித்து துண்டித்த மருமகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே உள்ள அனந்தப்பநாயக்கா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். மூத்த மகள் அமுதாவை சாமிநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து (33) திருமணம் செய்துள்ளாா். பேச்சிமுத்து கட்டட தொழிலாளியாவாா்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அமுதா குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்த நிலையில் சமாதானம் பேசி மனைவியை அழைத்து வர மது போதையில் சென்ற பேச்சிமுத்து தகாத வாா்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டாா்.
அப்போது மனைவி அமுதாவை பிடித்து இழுத்து ரகளை செய்தபோது மாமனாா் அய்யனாா் அதை தடுக்க முயன்றாா். இதனால் பேச்சிமுத்து மாமனாரின் கை விரலை கடித்து துண்டாக்கினாா். இதில் காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





