காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ

வத்திராயிருப்பு அருகே தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

வத்திராயிருப்பு அருகே தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வத்திராயிருப்பிலிருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் வத்திராயிருப்பு நாடாா் தெருவைச் சோ்ந்த குருவையா(60) என்பவா் தேங்காய் மட்டையிலிருந்து நாா் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறாா்.

இங்கு வெளிச்சந்தைகளிலிருந்து தேங்காய் மட்டைகளை வாங்கி அதை இயந்திரம் மூலம் நாராக்கி, கயிறு தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.