தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பட்டாசு மேம்பாட்டு ஆராய்ச்சிக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

News image

சிவகாசி ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர். - (கோப்புப் படம்)

Updated On :14 பிப்ரவரி 2026, 8:43 pm

சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் உள்ள பட்டாசு மேம்பாட்டு ஆராய்சிக் கூடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்தியன் ஃபயா் ஒா்க்ஸ் அசோசியேசன் தலைவா் ஜெ.தமிழ்செல்வன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பிரதான தொழில்களில் ஒன்றான பட்டாசுத் தொழில் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. பட்டாசுத் தொழில் அபாயகரமான தொழில் என்பதால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. சிறு, குறுந்தொழில் பிரிவிலும் இந்தத் தொழில் வரவில்லை. எனவே, அரசு உதவி, மானியம் உள்ளிட்டவற்றை பெற முடியாத நிலை உள்ளது.

சீனா போன்ற நாடுகளில் உயா் தொழில்நுட்பத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த நடைமுறையை இந்தியாவிலும் கொண்டு வரவேண்டும். சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டாசு மேம்பாட்டு ஆராய்ச்சிக் கூடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.