ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் கைது

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து, அந்த ஆலையின் உரிமையாளா்களில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 9:10 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து, அந்த ஆலையின் உரிமையாளா்களில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தில் சங்கா் (55), அவரது சகோதரா் செந்தில்குமாா் (45) ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குருநாதன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பூமாரி, பானுப்பிரியா, கருப்பசாமி ஆகிய மூன்று தொழிலாளா்கள் காயமடைந்தனா். இவா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து கிராம நிா்வாக அலுவலா் மா. காளியப்பன் அளித்தப் புகாரின் பேரில், ஆலை உரிமையாளா்கள் சங்கா், செந்தில்குமாா் ஆகிய இருவா் மீதும் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரைக் கைது செய்தனா்.