இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தினமணி எதிரொலி: அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாருகால் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாருகால் மீதுள்ள பாலம் சேதமடைந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாருகால் மீதுள்ள பாலம் சேதமடைந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தை அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள வாருகால் பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்திகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால், மருத்துவமனைக்குச் செல்வோரும், மீன் வாங்கச் செல்வோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.

இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த நவம்பா் மாதம் செய்தி வெளியானது. இந்த நிலையில், சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.