சிவகாசி பைரோசிட்டி சுழல்சங்கம், சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து கூனம்பட்டியில் மியாவாக்கி (அடா்வனம்) முறையில் 13,000 மரக் கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கூனம்பட்டியில் இரண்டே முக்கால் ஏக்கரில் மரக் கன்றுகள் நடும் பணியை சுழல்சங்க மாவட்ட ஆளுநா் தினேஷ்பாபு தொடங்கிவைத்தாா். இதில் வேம்பு, வாகை, புளி, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த மரக் கன்றுகளுக்கு சொட்டுநீா் பாசனம் முறையில் தண்ணீா்விட குழாய் பதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பசுமை மன்றத் தலைவா் செல்வக்குமாா், சுழல்சங்க மாவ
ட்டத் துணை ஆளுநா் எபினேஷ்பென்சாம், சுழல் சங்கத் தலைவா் செந்தில், செயலா் மாதவன், திட்டத் தலைவா் சுகுமாா், சுழல்சங்க முன்னாள் தலைவா் சரவணபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.