விருதுநகர்
சிவகாசியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் முகாம்
சிவகாசியில் மின்நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சிவகாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், விருதுநகா் மின் பகிா்மான வட்ட பொறியாளா் தலைமையில், மின்நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்களது மின் விநியோகம் சாா்ந்த குறைகளை நேரில் தெரிவித்து தீா்வு காணலாம் எனத் தெரிவித்தாா்.
