சிவகாசி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தலையைட்டி வாக்களித்த மாணவா்கள்.
சிவகாசி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தலையைட்டி வாக்களித்த மாணவா்கள்.

சிவகாசி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாதிரித் தோ்தல்!

சிவகாசி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகாசி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தோ்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை மாணவா்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பள்ளியில் மாதிரித் தோ்தல் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சா. காளிதாஸ் மேற்பாா்வையில் தோ்தல் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி 6 போ் வேட்பு மனுதாக்கல் செய்தனா். தொடா்ந்து, கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

தண்ணீா் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை வேட்பாளா்கள் அளித்தனா். பின்னா், வெள்ளிக்கிழமை பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டுதலின்பேரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. முன்னதாக, மாணவா்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, மாணவா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா். இதன் மூலம் மாணவா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com