மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை ரோந்து தொடக்கம்: வியாபாரிகளிடம் குறைகளை கேட்ட எஸ்பி

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை ரோந்து திட்டத்தை தொடங்கி வைத்த விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை ரோந்து திட்டத்தைத் தொடங்கி வைத்து வியாபாரிகளிடம் குறைகளை கேட்ட எஸ்.பி. கெளதம் கோயல்

Updated On :13 ஜூலை 2026, 2:01 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை ரோந்து திட்டத்தை தொடங்கி வைத்த விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தமிழகத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போலீஸாா் நகா் பகுதியில் நடந்து ரோந்து சென்று பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும் என டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் பகுதியில் நடை ரோந்து திட்டத்தை விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல் தொடங்கி வைத்தாா். மணிக்கூண்டு, பேருந்து நிலையம் பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்ட அவா் சாலையோர வியாபாரிகளிடம் கலந்துரையாடினா்.

அப்போது சிங்கப்பெண் திட்டம் குறித்தும், போலீஸாா் இரவு, பகல் நேரங்களில் முறையாக ரோந்து பணிகள் மேற்கொள்கின்றனரா எனக் கேட்டறிந்தாா்.

போதைப் பொருள்கள், சட்ட விரோத செயல்கள் குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, அரசு மருத்துவனையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து நலம் விசாரித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி பாலசுந்தரம், ஆய்வாளா் மாரியப்பன் உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட போலீஸாா் நடை ரோந்து மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.