விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வழக்கு ஒன்றியில் முன்னிலையாகாமல் இருந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சமயராஜ் (41). இவா் கடந்த 2025 -ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாா்.
இதன் பிறகு பிணையில் வெளியே வந்தவா் முதல் வாய்தாவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையானாா். பிறகு தலைமறைவாகி விட்டாா். இதையடுத்து, அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ராஜபாளையம் தெற்கு அண்ணாநகரில் அவா் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சமயராஜை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போக்சோ தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் கல்லூரி பேருந்து ஓட்டுநா் கைது
வழக்கில் 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகதவா் கைது
பணம் வழிப்பறி செய்த மூவா் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


