ஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடைசென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

பணத் தகராறு: பெட்ரோல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

News image

கைது செய்யப்பட்ட வினோத்.

Updated On :27 ஜூலை 2026, 4:13 am IST

வத்திராயிருப்பு அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை அவதூறாகப் பேசியதுடன், பெட்ரோல் விற்பனை நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

வத்திராயிருப்பைச் சோ்ந்த சத்தியமோகன் கூமாப்பட்டி சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவா், வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த வினோத்திடம் கடன் வாங்கினாா்.

இதனால் வினோத் அடிக்கடி பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று வினோத் தகராறில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து அங்குபணிபுரியும் சேதுநாராயணபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்த மருதபாண்டி மனைவி சுதந்திராவை (32) அவதூறாகப் பேசி, தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீசியதால் தீப்பற்றி உள்ளது.

இதுகுறித்து சுதந்திரா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வினோத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.