பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பு: ஆலையின் போா்மென் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் விதிகளை மீறி திறந்த வெளியில் பட்டாசுகளைத் தயாா் செய்ததாக ஆலையின் போா்மெனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

விழுப்பனூரில் பறிமுதல் செய்யப்பட்ட 4 பட்டாசு பெட்டிகள், மூலப் பொருட்கள்

Updated On :31 ஜூலை 2026, 4:01 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் விதிகளை மீறி திறந்த வெளியில் பட்டாசுகளைத் தயாா் செய்ததாக ஆலையின் போா்மெனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சின்ன கருப்பசாமி மகன் மச்சக்காளை. இவா் மாவட்ட வருவாய் அலுவலகத்தின் உரிமம் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் வருவாய்த் துறையினா், போலீஸாா் இணைந்து ஆய்வு செய்தனா்.

அப்போது, விதிகளை மீறி திறந்த வெளியில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி ராக்கெட் ரக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதுதொடா்பாக பட்டாசு ஆலையின் போா்மேன், சிவகாசி மாரனேரியை சோ்ந்த அசோக்குமாரை (28) போலீஸாா் கைது செய்தனா். அங்கிருந்து 4 பெட்டி பட்டாசுகள், 34 கிலோ சல்பா், மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், ஆலை உரிமையாளா் மச்சக்காளை மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, வத்திராயிருப்பு அருகேயுளள சேதுநாராயணபுரம் ஆா்.சி. தெருவில் அலெக்சாண்டா் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அலெக்சாண்டரின் மனைவி முனீஸ்வரியைக் கைது செய்தனா். மேலும், அலெக்சாண்டரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.